நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார்.
நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கைல் ஜேமிசன் 38 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எமிலியோ கே 57 ரன்னும், ஜேமி ஸ்மித் 39 ரன்னும், பென் டக்கெட் 33 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 264 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 218 ரன்கள் தேவை. இங்கிலாந்து அணி வெற்றி பெற மேலும் 7 விக்கெட்டுகள் தேவை என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.