கிரிக்கெட்

5வது டி20 போட்டி: நியூசிலாந்து வெற்றிபெற 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 43 பந்தில் 93 ரன்கள் குவித்தது.

ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற இந்திய அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.

முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. தொடக்கத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் சர்மா ஒரு ரன்னும், சஞ்சு சாம்சன் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் அரைசதம்

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 43 பந்தில் 93 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்தில் 5 சிக்சர், 5 பவௌண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 11.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய நமன் தீர் 33 ரன் எடுத்தார். நிதிஷ்குமார் ரெட்டி 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களைக் குவித்தது. நிதிஷ்குமார் ரெட்டி 22 ரன்கள் எடுத்தார்.

ஆடம் மில்னே 4 விக்கெட்

நியூசிலாந்து சார்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டும், பிளைர் டிக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT