கிரிக்கெட்

4வது டி20 போட்டி: 87 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ்-பிரேஸ்வெல் ஜோடி இணைந்து 40 பந்தில் 115 ரன்கள் குவித்தது.

நான்காவது டி20 போட்டியில் 87 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது.

டாஸ் வென்ற இந்தியா

இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.

கிளென் பிலிப்ஸ் சதம்

பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்னிலும், டேரில் மிட்செல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிரேஸ்வெல் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ்-பிரேஸ்வெல் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 40 பந்தில் 115 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் 46 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர், 4 பவுண்டரி அடங்கும்.

இந்தியா சார்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டும், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிக்கினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

இந்திய அணியின் திலக் வர்மா அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். நமன் தீர் 13 பந்தில் 28 ரன்னும், அபிஷேக் சர்மா 15 பந்தில் 27 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 11 பந்தில் 22 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 3-1 என முன்னிலையில் உள்ளது.

ஜேக்கப் டபி 4 விக்கெட்

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட்டும், மேத்யூ பிஷர், மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT