கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 246/5

நியூசிலாந்தின் டாம் லாதம், டாம் பிளெண்டல் அரை சதம் கடந்தனர்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாம் லாதம் அரை சதம்

அதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டேவன் கான்வே 31 ரன்னும், ஹென்ரி நிகோல்ஸ் 16 ரன்னும் எடுத்தனர். ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டானார். டேரில் மிட்செல் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

டாம் பிளெண்டல் அரை சதம்

6வது விக்கெட்டுக்கு டாம் பிளெண்டல், கிளென் பிலிப்ஸ் ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது. டாம் பிளெண்டர் அரை சதம் கடந்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளதௌ. டாம் பிளெண்டல் 53 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT