ஆடம் மில்னே
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

டி20 உலக கோப்பையில் விளையாடாத ஆடம் மில்னே அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய டி20 அணி அடுத்த மாதம் நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா அணியில் இடம் பெறவில்லை. நவம்பர் மாதம் தொடங்கும் ஒருநாள் தொடருக்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடம் மில்னே

தொடக்க வீரர்களான பின் ஆலன் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக இடம் பெறாத ஆடம் மில்னே மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் டி20 தொடரில் இந்தியாவை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் அக்டோபர் 22-ந்தேதி தொடங்குகிறது.

மொத்தம் 12 போட்டிகள்

இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:-

1. மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), 2. பின் ஆலன், 3. மைக்கேல் பிரேஷ்வெல், 4. மார்க் சாப்மென், 5. டேவன் கான்வே, 6. ஜேக்கப் டஃபி, 7. லூக்கி பெர்குசன், 8. ஜேக் பால்க்ஸ், 9. மேட் ஹென்றி, 10. பெவன் ஜேக்கப்ஸ், 11. கைல் ஜாமின்சன், 12. டேரில் மிட்செல், 13. கிளென் பிளிப்ஸ், 14. டிம் செய்பர்ட், 15. நாதன் ஸ்மித், 16. ஆடம் மில்னே.

SCROLL FOR NEXT