நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளியின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று (நவ. 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழந்த நிலையில், நிக்கோல்ஸ் (113) மற்றும் பிலிப்ஸ் (94) வலுவான நிலையில், களத்தில் இருக்க நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடங்கியது. இரண்டாம் நாளில் அதிக ரன்களை குவிக்க நினைத்த கிளென் பிலிப்ஸ் 118 ரன்களை எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
மறுப்பக்கம் நிக்கோல்ஸ் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிக்கோல்ஸ் 302 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 146 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். இவருடன் ஆடி வரும் நாதன் ஸ்மித் 41 பந்துகளில் 13 ரன்களை எடுக்க இரண்டாம் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது.
நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
முன்னதாக நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தின் போது முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமலும், டெவான் கான்வே 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 15 ரன்களும், டேரில் மிட்செல் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழந்து 243 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் நிக்கோல்ஸ் 113 ரன்களும், பிலிப்ஸ் 94 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.