கிரிக்கெட்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: திலக் வர்மா, குமார் குஷாக்ரா சதத்தால் 332 ரன்கள் குவித்த இந்தியா ஏ

4-வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா-குமார் குஷாக்ரா ஜோடி 206 ரன்கள் சேர்த்தது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி வெற்றிபெற 333 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா ஏ அணி.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்கதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் இந்தியா 'ஏ' -நேபாளம் மோதுகின்றன. டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

இந்தியா ஏ திணறல் தொடக்கம்

அதன்படி, இந்தியா ஏ அணி முதலில் களமிறங்கியது. சூர்யவன்ஷி-அபிஷேக் வர்மா தொடக்க வீரர்களாக இறங்கினர். அபிஷேக் சர்மா 9 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 2 ரன்னிலும், சூர்யவன்ஷி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா ஏ அணி 42 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

திலக் வர்மா சதம்

4வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் குமார் குஷாக்ரா இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

சிறப்பாக ஆடிய திலக் வர்மா சதமடித்து அசத்தினார். 4வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-குமார் குஷாக்ரா ஜோடி 206 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 107 ரன்னில் அவுட்டானார்.

சதமடித்த குமார் குஷாக்ரா

தொடர்ந்து அதிரடி காட்டிய குமார் குஷாக்ரா 117 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய சுயான்ஷ் ஷெட்கே 14 பந்தில் 31 ரன் குவித்தார்.

இறுதியில், இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது.

நேபாளம் அணி சார்பில் சந்தீப் லமிசனே, லலித் ராஜ்பன்ஷி தலா 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய இலக்கு

இதையடுத்து, 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT