டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லைக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 182 ரன்கள் எடுத்துள்ளது.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.
7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார்.
நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்குகிறது.