அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
இதில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் கிராவெய்ட்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோல், பெண்கள் இரட்டையரில் நம்பர் 1 ஜோடியான செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.