ஆப்கானிஸ்தான் அணி டெல்லியில் இந்தியாவுக்கு எதிராக செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்ராகிம் ஜத்ரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடத்திற்குப் பிறகு நவீன்-உல்-ஹக் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடினார். அதே வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடினார்.
இப்ராகிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நூர் அல் ரஹ்மான், சேதிக்குல்லா அடல், தார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஓமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்கேயலியா கரோட், நூர் அகமது, முஜிப் உர் ரஹ்மான், பஸல்ஹாக் பரூக்கி, அப்துல்லா அகமதுசாய், நவீன் உல்ஹக்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் போட்டி நடைபெற இருக்கிறது.