நவ்தீப் சைனி, 
கிரிக்கெட்

IPL 2026 | கே.கே.ஆர். அணியில் இணைந்த நவதீப் சைனி

கே.கே.ஆர் அணியின் ஹர்ஷித் ரானா காயம் காரணமாக இருந்து விலகியுள்ளார்.

மாலை மலர்

19-வது ஐ.பி.எல் தொடரானது வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 10 அணிகள் போட்டியிடுகின்றன.

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ரானா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், ஹர்ஷித் ரானாவிற்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடர் தொடங்கும் முன் கொல்கத்தா அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டாவது வீரர் சைனி ஆவார். முன்னதாக ஆகாஷ் தீப்பிற்கு மாற்று வீரராக சவுரப் துபேவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்தது.