நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான லபுசேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளாரான நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 9-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த 1999-ம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து விளையாடும் முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக 13 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாக் கிளேட்டன், கோரி ரோக்கிச்சியோலி ஆகியோர் அறிமுகம் ஆகின்றனர்.
ஆனால், அனுபவமிக்க பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷேன், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மார்னஸ் லபுஷேனுக்குப் பதிலாக குயின்ஸ்லாந்து அணியின் இடக்கை பேட்டரான ஜாக் கிளேட்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நாதன் லயன் அணியில் சேர்க்கப்படாததும் குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக ஆப்-ஸ்பின்னர் கோரி ரோக்கிச்சியோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜாக் கிளேட்டன், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, கோரி ரோக்கிச்சியோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.