அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நமீபியா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி விண்டோக்கில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜேன் பிரைலிங்க் பொறுப்புடன் ஆடி சதமடித்து 126 ரன்னில் அவுட்டானார். ஜெர்ஹார்டு ஹெராமஸ் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரின், கர்டிஸ் காம்பர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணியின் கர்டிஸ் காம்பர் தாக்குப் பிடித்து சதமடித்தார். அவர் 106 ரன்னில் வெளியேறினார். டாக்ரெல், மெக்பிரின் ஆகியோர் ஓரளவு ஒத்துழைப்பு அளித்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து அணி 44.5 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.