நமன் தீர்
கிரிக்கெட்

டி20-யில் அறிமுகம்: கம்பீர், ஷ்ரேயாஸ் அய்யர் சொன்னது என்ன? உண்மையை போட்டுடைத்த நமன் தீர்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான நமன் தீர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியில் 26 வயதான பேட்டிங் ஆல்-ரவுண்டரான நமன் தீர் அறிமுகம் ஆனார்.

3-வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பல்

இவர் பேட்டிங் செய்வதுடன் சுழற்பந்து வீசக்கூடியவர். முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளும், 3-வது போட்டியில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது போட்டியில் 1 பந்து மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பவுண்டரி அடித்தார். 3-வது போட்டியில் வாய்ப்புகள் இருந்த போதிலும், 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை என்றாலும் பந்து வீச்சில் அசத்தினார். அறிமுகம் ஆனபோது அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தன்னிடம் கேட்டுக் கொண்டது என்ன? என்பதை விவரித்துள்ளார்.

நமன் தீர் இந்திய அணியில் அறிமுகம் ஆனது குறித்து கூறியதாவது:-

நான் பேட்டிங் ஆல்-ரவுண்டர். 3-வது போட்டியில் பேட்டிங் செய்யக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், அதை பயன்படுத்திக் கொள்ள முடியாதது எனக்கு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நான் பந்து வீசுவது இல்லை என்பது அர்த்தம் இல்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதியால் நான் சில ஓவர்களை மட்டுமே வீசும் வாய்ப்பை பெற்றேன். ஆனால், ஆனால், நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே, பந்து வீசு வருகிறேன். அதை மிகவும் மகிழ்ச்சியாக செய்கிறேன்.

தன்னுடைய பங்களிப்பு என்ன?

அணிக்கு என்னுடைய பங்கு என்ன என்பதை பொறுத்த வரையில், நான் 6 அல்லது 7-வது இடத்தில் சூழ்நிலையை பொறுத்து பேட்டிங் செய்ய களம் இறங்க வேண்டும். பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வீச வேண்டும். அதில் குறைந்த அளவு ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். இதைத்தான் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தன்னிடம் கேட்டுக் கொண்டனர்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு தாக்குதல் உத்தி என்பது ஒரு தற்காப்பு உத்தியாகவும் இருக்க முடியும், ஏனென்றால் ஒரு விக்கெட்டை எடுப்பதை விடச் சிறந்த செயல் வேறு எதுவும் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாக இருப்பது இதற்கு உதவுகிறது, ஏனென்றால் நீங்கள் பேட்ஸ்மேனின் நிலை, அவர் பந்தை எங்கிருந்து தூக்கி அடிக்கிறார், அவரது பாதுகாப்பு நிலை, மற்றும் அவரால் ஆடக்கூடிய ஷாட்களின் வகை ஆகியவற்றை புரிந்துகொள்கிறீர்கள். நான் பந்து வீசும்போது இந்த விஷயங்களைக் கவனித்துக்கொண்டே இருப்பேன்.

இவ்வாறு நமன் தீர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT