கிரிக்கெட்

MS Dhoni | அடுத்த சீசனில் எம்.எஸ். தோனி... முன்னாள் வீரர் சொன்ன சூப்பர் தகவல்

எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முன்னாள் வீரர் சொன்ன புது தகவல்.

ஐ.பி.எல். என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் எம்.எஸ். தோனி என்ட்ரியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர். குறிப்பாக சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு போட்டிகளையும் தவிர்த்து எம்.எஸ். தோனியை ஆடுகளத்தில் பார்ப்பதே முக்கியம்.

அவரது எதிர்காலம் குறித்த சமீபத்திய விவாதங்களைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் எம்.எஸ். தோனி மற்றொரு சீசனிலும் சி.எஸ்.கே. அணிக்காக விளையாட வருவதன் மூலம் அனைவரையும் மீண்டும் ஒருமுறை ஆச்சரியப்படுத்தலாம் என்பது குறித்து தனது பார்வைகளை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய அவர், "எம்.எஸ். தோனியை பொறுத்தவரை உங்களுக்கு உறுதியாகத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர் என்ன செய்யப் போகிறார் என்று உங்களால் கணிக்க முடியாது. தன் வலது கை என்ன நினைக்கிறது என்பதை இடது கைக்கு தெரியப்படுத்த அவர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று நான் எப்போதும் சொல்வதுண்டு.

அதனால், நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கே பேசிக்கொண்டிருந்தாலும், எம்.எஸ். தோனி என்ன நினைக்கிறார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. என்ன, அவருக்கு 43, ​​44 வயதா? அதனால் அவர் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தக்கூடும் என்று என் மனம் நினைக்கிறது. எனவே அடுத்த ஆண்டும் ஒரு ஆச்சரியமாக இருக்கலாம்," என்று கார்த்திக் கூறினார்.