கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் அரசியல் நிலைப்பாடா? - பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் மும்பை அணி வெளியேறிய நிலையில், வாய்ப்புகளை தவறவிட்டதாக ஜெயவர்தனே பதில்

கடந்த ஞாயிற்றுகிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த வாழ்வா சாவா போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே, “ இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எங்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் அமைந்தது. இரண்டு மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோதும், நாங்கள் அதை பயன்படுத்த தவறவிட்டோம்.”

மேலும், “இந்த நெருக்கடியான காலத்தில் எந்த கருத்தும் தலைமை பயிற்சியாளரான என்னால் தற்போது கூறமுடியாது. நாங்கள் எங்களின் திறமைகளை சரியாக பயன்படுத்தவில்லை.”

மும்பை அணியின் மூத்த வீரர்களை களமிறக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “காயம் காரணமாக மட்டுமே அவர்கள் விளையாடவில்லை, வேறு எந்தவிதமான உள்நோக்கமும் அணி நிர்வாகத்திடம் கிடையாது” என்றும் செய்தியாளர் சந்திப்பில் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.