கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்

கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று, பின்னர் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களால் சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதைவிட அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. வீரர்கள் அறையில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த 3 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றம்

2024-ல் 10-வது இடத்தை பிடித்தது. 2025-ல் பிளேஆஃப் வரை சென்றது. 2026 சீசனில் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முயன்றார். அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிடுக்க முடிவு செய்தது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி

ஹர்திக் பாண்ட்யாவை வாங்க (Trade) பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வருதாக தகவல் வெளியானது.

மும்பை இந்தியன்ஸ் விளக்கம்

இந்நிலையில், வீரர்களின் Trade தொடர்பாக தற்போது வரை எந்த அணியுடனும் பேச்சுவார்த்தையில் மும்பை அணி ஈடுபடவில்லை.

அணியின் செயல் திறன் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அணியின் மற்ற முடிவுகளை மும்பை அணி எடுக்கவுள்ளது என தகவல் வெளியாகியது.