கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் தக்கவைப்பு மற்றும் வீரர்கள் விடுவித்தலை அறிவித்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்ல, அங்கிருந்து அர்ஷ்தீப் சிங் மும்பைக்கு மாறினார். இதனால், மும்பையில் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளோம் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளாக சி.எஸ்.கே.வும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் இருக்கின்றன.

SCROLL FOR NEXT