கிரிக்கெட்

ஐ.பி.எல்.2027: சி.எஸ்.கே. அணி ஆலோசகர் ஆகிறாரா எம்.எஸ்.தோனி?

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை பெற்றுக் கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை விடுவிக்க உள்ளதாகவும், அவர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு விவரங்களை 10 அணிகளும் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எம்.எஸ்.தோனி

அனைவரது எதிர்பார்ப்பும் எம்.எஸ்.தோனி மீதே இருக்கிறது. அவர் மற்றொரு சீசனில் ஆடுவாரா அல்லது ஒய்வு முடிவை எடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

45 வயதான தோனி கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே. அணிக்கு 5 ஐ.பி.எல். கோப்பையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் அவர் பெற்றுக் கொடுத்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

ஆலோசகர்?

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2023-ம் ஆண்டு விலகினார். ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கடந்த ஆண்டு அணியில் இடம்பெற்றாலும், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட தோனி விளையாடவில்லை.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து சமீபத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உடற்தகுதி தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு டிசம்பர் இறுதிக்குள் முடிவை அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை விடுவிக்க உள்ளதாகவும், அவர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் தோனி ஓய்வுபெறுவாரா? என்பது இன்று மாலை தெரிய வரும்.

2 வீரர்கள் மாற்றம்

இதுவரை 10 வீரர்கள் வர்த்தக முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வீரர்கள் பரிமாற்ற விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது, நாதன் எல்லீஸ் ஆகியோரை ஐதராபாத்துக்கு பரிமாற்றம் செய்தது. அதற்கு பதிலாக அங்கிருந்து லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே. ஒப்பந்தம் செய்தது.

SCROLL FOR NEXT