கிரிக்கெட்

IPL 2026 | சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த எம்எஸ் தோனி... ஆர்ப்பரித்த ரசிகர்களால் அதிர்ந்த சேப்பாக்கம்

களத்தில் சி.எஸ்.கே. வீரர்களுடன் எம்.எஸ். தோனி உரையாடும் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டன.

ஐ.பி.எல். 2026 போட்டியின் போது எம்.எஸ். தோனி களத்திற்கு வந்தார். நடப்பு 2026 சீசன் முழுவதும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான எம்.எஸ். தோனி கால் தசைப்பிடிப்பு காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

பின்னர், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் சி.எஸ்.கே. அணியுடன் இருந்த அணி கூட்டணியை குலைக்க விரும்பாததால், தோனியே போட்டிகளில் இருந்து விலகி இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சி.எஸ்.கே. அணியின் கடைசி ஐ.பி.எல். 2026 உள்ளூர் போட்டியின் போது, எம்.எஸ். தோனி தனது கட்டைவிரலில் காயம் அடைந்ததாக செய்தி வெளியானது. டாஸின் போது சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி "இங்கேதான் இருக்கிறார்" என்று உறுதிப்படுத்தினார், ஆனால் அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றும் கூறினார்.

சி.எஸ்.கே. அணியின் டிரெசிங் ரூமில் அவர் இருந்த புகைப்படங்கள் வைரலாக பரவின. சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 18) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்2026 தொடரின் 63வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்களை குவித்த நிலையில், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கும் முன்பு எம்.எஸ். தோனி களத்திற்குள் என்ட்ரி கொடுத்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நுழைந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சி.எஸ்.கே. வீரர்களுடன் களத்தில் சிறிது நேரம் செலவிட்ட எம்.எஸ். தோனி அதன்பிறகு களத்தில் இருந்து விடைபெற்று கொள்ள போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.