கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் எம்.எஸ்.தோனி: சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணிக்கு 5 முறை கோப்பை பெற்றுக் கொடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி.

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு விவரங்களை 10 அணிகளும் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அனைவரது எதிர்பார்ப்பும் எம்.எஸ்.தோனி மீதே இருந்தது.

ஓய்வு அறிவித்த எம்.எஸ்.தோனி

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5 முறை கோப்பை வென்றவர்

45 வயதான தோனி கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். சி.எஸ்.கே. அணிக்கு 5 ஐ.பி.எல். கோப்பையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் அவர் பெற்றுக் கொடுத்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2023-ம் ஆண்டு விலகினார். ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கடந்த ஆண்டு அணியில் இடம்பெற்றாலும், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட தோனி விளையாடவில்லை.

சிஎஸ்கே ஆலோசகர்

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் ஆலோசகர் பொறுப்பை எம்.எஸ்.தோனி ஏற்க உள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2 வீரர்கள் மாற்றம்

இதுவரை 10 வீரர்கள் வர்த்தக முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வீரர்கள் பரிமாற்ற விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது, நாதன் எல்லீஸ் ஆகியோரை ஐதராபாத்துக்கு பரிமாற்றம் செய்தது. அதற்கு பதிலாக அங்கிருந்து லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே. ஒப்பந்தம் செய்தது.

SCROLL FOR NEXT