இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. மழை குறுக்கீடு செய்ததால், போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். இது அவருடைய 283-வது ஒருநாள் போட்டியாகும்.
அத்துடன் (67 டெஸ்ட், 159 டி20) இது அவருடைய 509-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 559 போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். எம்.எஸ். தோனி 538 போட்டிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.