கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள் கடந்த 3வது வங்கதேச வீரர் மொமினுல் ஹக்

வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது.

வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய ஷாண்டோ சதமடித்தார். மொமினுல் ஹக் 91 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 386 ரன்கள் எடுத்தது.

27 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தொடர்ந்து ஆடிய வங்கதேசம் நான்காவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் அரை சதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், வங்கதேச அணிக்காக 5000 ரன்கள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை மொமினுல் ஹக் படைத்தார்.

இவருக்கு முன் முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் ஆகியோர் 5000 ரன்களைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.