பி.சி.சி.ஐ. தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் இந்திய அணி வீரர்கள் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஓனோ கெய்ச்சியை டெல்லியில் சந்தித்தனர்.
இந்தியா, ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
செப்டம்பர் 22ம் தேதி அன்று ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது.
ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா-ஜப்பான் அணிகள் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் இந்திய அணி வீரர்கள் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஓனோ கெய்ச்சியை டெல்லியில் இன்று சந்தித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஜப்பான் தூதர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இச்சந்திப்பின்போது இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் கிரிக்கெட் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி வரும் புதிய உறவு குறித்து பேசப்பட்டது.
இந்திய அணி வீரர்களைச் சந்தித்த ஜப்பான் தூதர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் இருதரப்பு டி20 போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.