வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் இரண்டாம் நாளில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். அவர் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்
கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்த வரிசையில் 435 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 9 டெஸ்ட்களில் 48 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.