கிரிக்கெட்

ஒரே போட்டியில் விளையாடி 147 இடம் முன்னேற்றம்: ரென்ஷாவின் அசுர சாதனை

ரென்ஷா முதல் இன்னிங்சில் 190 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்னும் குவித்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒரே போட்டியில் விளையாடியதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷா 147 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேத்யூ ரென்ஷா முதல் இன்னிங்சில் 190 ரன் குவித்தார். இரண்டாவது இன்னிங்சில் 82 ரன் எடுத்தார்.

பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தினார். இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

147 இடம் முன்னேறிய ரென்ஷா

இந்நிலையில், ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷா 147 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அவர் தற்போது 49வது இடத்தில் உள்ளார்.

அபார ஆட்டத்தின் மூலமாக ஐசிசி தரவரிசையில் அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளார்.

டாப் 10 பட்டியல்

முதல் நான்கு இடங்களில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளனர்.

நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா 6வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 8வது இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் சுப்மன் கில் 9வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 4 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT