இந்தியா, நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.
முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்தியா தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. மழை காரணமாக 7.30க்கு டாஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மழை தொடர்வதால் டாஸ் போடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.