கிரிக்கெட்

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

முதல் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது.

முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்தியா தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

டாசில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டாஸ் போட்ட சில நிமிடங்களில் மழை மீண்டும் பெய்ததால் போட்டி தொடங்க தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை நிற்காததால் மைதானம் முழுவதும் ஈரமானது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

SCROLL FOR NEXT