கிரிக்கெட்

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல வீரரை அதிரடியாக நீக்கிய ஆஸ்திரேலியா

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 15-ம் தேதியும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 24-ம் தேதியும் தொடங்குகின்றன.

இந்நிலையில், ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிக்கப்பட்டது.

எதிர்வரும் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அவரது சுமாரான பார்ம் மற்றும் குறைவான ஸ்டிரைக் ரேட் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், அவருடன் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.