கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: ஆட்ட நாயகன் பும்ரா, தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் #T20WorldCup

ஆட்ட நாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

மாலை மலர்

அகமதாபாத்:

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில், 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இதேபோல், சஞ்சு சாம்சன் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்பட 321 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.