கிரிக்கெட்

டிஎன்பிஎல் 2026: திருச்சியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது மதுரை

திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நடத்தப்படுகிறது.

டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

173 ரன் குவித்த திருச்சி அணி

அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

ராஜ்குமார் 24 ரன்னில் அவுட்டானார். ஜெயராமன் சுரேஷ்குமார் 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.

6-வது விக்கெட்டுக்கு சஞ்சய் யாதவ் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 65 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ராஜலிங்கம் 3 விக்கெட்

மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் ராஜலிங்கம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. முதலில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக கிரண் கார்த்திகேயன் 38 ரன்னும், சதுர்வேத் 27 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் இணைந்த குர்ஜப்நீத் சிங், சரவணன் ஜோடி அதிரடியாக ஆடி சிக்சர் , பவுண்டரிகளை விளாசினர்.

திரில் வெற்றி பெற்ற மதுரை

இறுதியில், மதுரை அணி 19.4 ஓவரில் 174 ரன்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பதிவு செய்தது. சரவணன் 13 பந்தில் 26 ரன்னும், குர்ஜ்ப்நீத் சிங் 9 பந்தில் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

திருச்சி அணி சார்பில் ஆண்டனி தாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.