சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ரஜத் படிதார் அதிரடியில் மத்திய பிரதேசம் அணி அசாம் அணியை 131 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
நியூ சண்டிகரில் இன்று நடந்த போட்டியில் மத்திய பிரதேசம், அசாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற அசாம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மத்திய பிரதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்தது.
முதலில் நிதானம் காட்டிய ரஜத் படிதார் 25 பந்தில் அரை சதம் கடந்தார். அடுத்த 50 ரன்களை 16 பந்தில் கடந்தார். அவர் 48 பந்தில் 13 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 135 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
4வது விக்கெட்டுக்கு ஷிவாங் குமார்-ரஜத் படிதார் ஜோடி அதிரடியாக ஆடியது. 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 பந்தில் 153 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் அணி களமிறங்கியது. அந்த அணியின் சிப்சங்கர் ராய் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், அசாம் அணி 17.4 ஓவரில் 119 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் மத்திய பிரதேசம் அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது.