எய்டன் மார்கிராம்
கிரிக்கெட்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!

ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டதால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புதிய கேப்டனை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ டெல்லிக்கு அணிக்கு கொடுத்து, அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவை வாங்கியுள்ளது.

டெல்லி அணிக்கு சென்ற ரிஷப் பண்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். இவரது தலைமையின் கீழ் கடந்த இரண்டு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இதனால் லக்னோ அணி, ரிஷப் பண்ட்-ஐ அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. அவரை வாங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தயாராக இருந்ததது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு, குல்தீப் யாதவை வாங்கியுள்ளது.

மார்க்கிராம் சொல்வது என்ன?

இதனால் லக்னோ அணி புதிய கேப்டனை நியமிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அணியில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்கிராம் உள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA டி20 லீக்கிலும் கேப்டனாக இருந்து வருகிறார். அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹன்ட்ரடு (Hundred) தொடரிலும் கேப்டனாக உள்ளார்.

இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக எய்டன் மார்கிராம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் உள்ளது.

இந்த நிலையில் அவரிடம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எய்டன் மார்கிராம் அளித்த பதில் பின்வருமாறு:-

எனக்கு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம். அந்த அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. அந்த பொறுப்பு யாருக்குக் கிடைத்தாலும், அவர்கள் அதை ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இதுகுறித்து நான் இன்னும் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.

இவ்வாறு மார்கிராம் தெரிவித்துள்ளார்.

மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா டி20 அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் நிக்கோலஸ் பூரன் போன்ற கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் பகுதி நேர கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.