வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோவும், துணை கேப்டனாக மெஹிதி ஹசன் மிராசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் அனுபவமிக்க சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், மற்றும் தஸ்கின் அகமது ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச டெஸ்ட் அணி விவரம் வருமாறு:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), சவுமியா சர்க்கார், ஷட்மன் இஸ்லாம், தன்ஷித் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், அமித் ஹசன், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), தைஜுல் இ இஸ்லாம், தாஸ் மஹ்முத் இஸ்லாம், அகமது, எபடோட் ஹொசைன் சவுத்ரி, முஸ்பிக் ஹசன், லிட்டன் தாஸ்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஆன லிட்டன் தாஸ் களமிறங்க உள்ளார்.
இதுதொடர்பாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டார்வினில் உள்ள மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 13 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட லிட்டன் தாஸ் தகுதியுடன் உள்ளார் என தெரிவித்துள்ளது.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. வங்கதேச அணியை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துகிறார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரை குயின்ஸ்லாந்திலும் நடைபெற உள்ளது.