முகமது ரிஸ்வான்- லிட்டன் தாஸ்
கிரிக்கெட்

டெஸ்ட் தொடரின்போது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மோசமான நடந்து கொண்டார்: லிட்டன் தாஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தொழில்முறையற்ற வகையில் நடந்து கொண்டாக வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்கதேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது.

இந்த தொடரின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வீரரான முகமது ரிஸ்வான் தொழில்முறையற்ற வகையில் நடந்ததாக வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைக்கொடுப்பது வழக்கம். ஆனால், முகமது ரிஸ்வான் கைக்கொடுக்க மறுத்துவிட்டார் என லிட்டன் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.