மோரிஸ்
கிரிக்கெட்

நிச்சயதார்த்த விழாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம்..!

கண்ணாடி மீது விழுந்ததால் கையில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் (Lance Morris), தனது நிச்சயதார்த்த விழாவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மீண்டும் காயமடைந்துள்ளார். இதனால் அவர் சுமார் நான்கு வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான லான்ஸ் மோரிஸ் (வயது 28), கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி கண்ணாடித் துண்டுகள் மீது விழுந்ததில், அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வலது கை பந்து வீச்சாளர் என்பதால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இருந்த போதிலும் நான்கு வாரங்கள் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பின்னடைவை சந்தித்த மோரிஸ்

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மோரிஸ், சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஜோ ரூட்டின் விக்கெட்டும் அடங்கும்.

தற்போது கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து, அடுத்த நான்கு வாரங்களில் மீண்டும் விளையாட தயாராக இலக்கு நிர்ணயித்துள்ளார். தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வரும் மோரிஸுக்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT