இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தவர் தனஜ்செய டி சில்வா. 2024, ஜனவரியில் இலங்கை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், இரண்டு ஆண்டுகளில் தனது கேப்டன் பதவியை துறந்தார்.
மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற தனஞ்சய டி சில்வா 7 போட்டிகளில் வென்றுள்ளார். 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். 3 போட்டிகளை டிராவில் முடித்துள்ளார்.
கேப்டனாக இருக்கும்போது தனஞ்செய டி சில்வா 1,130 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 36.45ஆக இருந்தது. பந்துவீச்சில் 9 விக்கெட்டும் எடுத்திருந்தார். கடைசியாக இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியுற்றது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வந்த இவர், டெஸ்ட்டில் முதல்முறையாக செயல்படவிருக்கிறார்.
குசால் மெண்டிஸ் மொத்தம் 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,836 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12-வது அதிகபட்ச ரன்கள் குவித்தவராக இருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் உடனான டி20 தொடரில் நாளை மோதவுள்ளது.