கிரிக்கெட்

நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடர்: குர்னூர் பிரார் IN, குல்தீப் யாதவ் OUT

குர்னூர் பிரார் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்திருப்பது முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்பின், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

டெஸ்ட் தொடர்

முதலில் நடந்த டி20 தொடரில் இந்தியா 3-2 என கைப்பற்றியது. 4 போட்டிகள் முடிவில் ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ் விடுவிப்பு

அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக குர்னூர் பிரார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குர்னூர் பிரார்

இளம் வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் குர்னூர் பிரார், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்திருப்பது அவருக்கு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனால் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் குர்னூர் பிரார் விளையாட மாட்டார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT