கிரிக்கெட்

'யாரோ ஒருவரை' இந்தியாவுக்காக விளையாட அனுமதிப்பதா? ஷ்ரேயஸ் அய்யரை கடுமையாக சாடிய ஸ்ரீகாந்த்

மூன்றாவது டி20 போட்டியில், தாக்கூர் இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 17 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

வியாழக்கிழமை டெல்லியில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 34 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார்.

ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்:

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானை 94 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. இதில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடரை முழுமையாக வென்ற போதிலும், அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைத்து, அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூரை களமிறக்கிய இந்தியாவின் முடிவு, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்தின் விமர்சனத்திற்கு உள்ளானது.

மூன்றாவது டி20 போட்டியில், தாக்கூர் இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். மோசமான புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும் அவருக்கு ஆதரவளித்ததற்காக அணி நிர்வாகத்தை ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.

யூடியூப் சேனலில் பேச்சு:

"அவரை போன்ற ஒரு சாதாரண வீரர் எப்படி இந்திய தொப்பியை அணிய முடியும்? யஷ் தாக்கூருக்கே இந்திய தொப்பி கிடைக்கிறது என்றால், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்திய தொப்பியை மிக எளிதாகக் கொடுக்கிறீர்கள் என்ற சமிக்ஞையை அது அனுப்புகிறது. அது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்தியாவுக்காக விளையாட, உங்களுக்கு நம்பகத்தன்மை, திறமை மற்றும் வலுவான உள்ளூர் போட்டி செயல்திறன் தேவை," என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கூறினார் .

யஷ் தாக்கூர் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அநீதி. இது நியாயமானதோ சரியானதோ அல்ல. புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு இது நியாயமில்லை. யஷ் தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்கள் தங்களது ஐ.பி.எல். அணிகளில் நிரந்தர வீரர்களாக கூட இருப்பதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

SCROLL FOR NEXT