ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 28-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியின் முதல் வெற்றி இது ஆகும்.
எனினும், கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மோசமான சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிக முறை டக்-அவுட் ஆன துவக்க வீரர் என்ற சாதனையை ரஹானே படைத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இன்றைய (ஏப்ரல் 19) போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் ரஹானே இதுவரை 12 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இவரைத் தொடர்ந்து பார்த்திவ் பட்டேல் (11) இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் (10) மூன்றாவது இடத்திலும், கவுதம் கம்பீர் (10) மற்றும் டேவிட் வார்னர் (09) என முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடிய ரஹானே 152 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவரது சராசரி 25.33 ஆக உள்ளது.