மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல் ரவுண்டரான் கெய்ரன் பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் கோவாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மஹேலா ஜெயவர்தனே சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல் ரவுண்டரான கெய்ரன் பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம், அணியுடன் நீண்ட காலமாகப் பயணித்து வரும் பொல்லார்டுக்கு தற்போது தலைமைப் பயிற்சியாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2010-ஆம் ஆண்டு முதல் தொடர்பில் இருக்கும்
கெய்ரன் பொல்லார்டு ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
2022-ம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர், கடந்த 4 சீசனாக அணியின் பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.