தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவ அழைக்கப்பட்டதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தங்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இங்கிலாந்து ஒயிட்-பால் அணியை பலப்படுத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக கெவின் பீட்டர்சனை சிறப்பு ஆலோசகராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவர் அடுத்த 15 மாதங்களுக்கு அணியுடன் சேர்ந்து செயல்படுவார்.
ஒயிட்-பால் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) உறுதிப்படுத்தியுள்ளது.
கெவின் பீட்டர்சன் கடந்த 12 வருடத்திற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தற்போது மீண்டும் அணியுடன் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே மார்கஸ் த்ரெஸ்கோதிக், டிம் சவுத்தி, ஜீத்தன் படேல், சாரா டெய்லர் ஆகியோர் சப்போர்ட் ஸ்டாஃப் ஆக உள்ளனர். அவர்களுடன் இவரும் இணைவார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட இருக்கிறது. அதன்பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடர்களில் கெவின் பீட்டர்சன் சிறப்பு ஆலோசகராக அணியுடன் இணைந்து செல்வார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவ அழைக்கப்பட்டதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். 2014-க்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியின் சீருடையை அணிவது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம் மற்றும் மிகவும் சிறப்பான தருணமாகும்.
தங்களிடம் அபாரத் திறமை கொண்ட 'ஒயிட்-பால்' (white-ball) கிரிக்கெட் அணி உள்ளது. இந்த வீரர்களின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வர, அவர்களுடன் இணைந்து அயராது உழைக்க நான் ஆவலாக உள்ளேன். அடுத்த 12 மாதங்களுக்குப் மெக்கல்லத்தின் ஆலோசனைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு அற்புதமான வாய்ப்பு. பணியைத் தொடங்க நான் மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.