மனைவியுடன் சஞ்சு சாம்சன் 
கிரிக்கெட்

சஞ்சு சாம்சனுக்கு நாளை பிரமாண்ட விழா நடத்தும் கேரள அரசு

Perumal

டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு நாளை பிரமாண்ட விழா நடத்துகிறது கேரள அரசு

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார். மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதை வென்றும் அசத்தினார்.

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் சொந்த ஊர் திரும்பினார். அப்போது கேரள மாநில அமைச்சர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளை சஞ்சு சாம்சனுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கும் விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கேரளாவின் கடற்கரை நகரான விழிஞ்சத்தில் பிறந்தவர் சஞ்சு சாம்சன்.