ஐ.பி.எல். 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதான சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே சீசனில் அதிக ரன்கள், அதிக சிக்சர், அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ளிட்ட சாதனைகளை படைத்தார். இதன் மூலம் இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். சிறுவன் என்பதால், அவருடன் அவரது பெற்றோர் செல்ல பிசிசிஐ சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
அவருக்கு பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யவன்ஷி குறித்து கங்கனா ரனாவத் கூறுகையில் “நாங்கள் உண்மையிலேயே அவரை மனதார வாழ்த்துகிறோம். நாட்டிங்கான சச்சின் தெண்டுல்கர், விராட் கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். அவர் மீது நெருக்கடியை சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. உலக கோப்பை போன்ற வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர் பார்ப்பதற்கு நன்றாக உள்ளார்.” என்றார்.