இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 அரைசதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளா்.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜோ ரூட், தனது சிறப்பான பேட்டிங் திறமையால் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவரது நிலையான ஆட்டம் அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது போட்டியில் 68 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 20 சதங்களையும், 50 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார். அத்துடன் 50 அரைசதங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக மோர்கன் 42 அரைசதங்களும், இயன் பெல் 35 அரைசதங்களும், பட்லர் 30 அரைசதங்களும் அடித்துள்ளனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 96 அரைசதங்களுடன் முன்னிலையில் உள்ளார்.