ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது.
இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டு ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மோசமான வானிலையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
வானிலை சீரான நிலையில் காலை 11.45 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி 5 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா டக் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 9 ரன்னும், இஷான் கிஷன் 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
ஷ்ரேயஸ் அய்யர் 16 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஜப்பான் அணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை கட்டுப்படுத்தியது.