ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் பந்துவீச்சு, ஆல் ரவுண்டர் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை விட ஒரு இடம் முன்னேறி யான்சென் முதலிடம் பிடித்துள்ளார்.
இதேபோல, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை விட 5 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர் வரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது.
முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் 61 ரன் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் 85 ரன் குவித்தார். கேப்டவுனில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 52 ரன், பந்துவீச்சில் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.