கிரிக்கெட்

தொடரும் சோதனை: பஞ்சாப் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து விலகிய பயிற்சியாளர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.

ஐபிஎல் 2027 சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அணிகளும் அணியை கோப்பையை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கோப்பை வெல்லாத பஞ்சாப்

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2014 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதற்கிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலே தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியில் மேலும் இரண்டு பயிற்சியாளர்கள் அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ரிக்கி பாண்டிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் பயிற்சிக் குழுவில் குறைந்தது 3 புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விலகும் பயிற்சியாளர்கள்

பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

அதேபோல், அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்சும் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.

இருவரும் சமீபத்தில்தான் தங்கள் முடிவை தெரிவித்தனர் என பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது. புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தற்போது தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் உள்ளது.

ஹாடின் மற்றும் ஹோப்ஸ் இருவருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் புதிய பொறுப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT