கிரிக்கெட்

ராஜ்கோட்டில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்: அடுத்தடுத்து அதிரடி

இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.

மாலை மலர்

ராஜ்கோட்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.

முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.