கிரிக்கெட்

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்

ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.டி20 உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஓரம் செயல்பட்டார்.

மாலை மலர்

வெலிங்டன்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஷேன் ஜூர்கன்சன் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார்.

இதனால் காலியான அந்த வெற்றிடத்தை ஜேக்கப் ஓரம் நிரப்புகிறார். ஏற்கனவே அவர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

46 வயதான ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.